பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்! ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அரச பாடசாலைகளின் தவணை பரீட்சைக்கான வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் மாகாண மட்டங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண அரசாங்க பாடசாலைகளின் 10 ஆம் மற்றும் 11 ஆம் தர மாணவர்களின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நேற்றைய தினம் (2) மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்தது.
நாளைய தினம் (4) மற்றும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த விஞ்ஞானம், கணிதம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்கள் கசிந்துள்ளமை இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்தது.
அத்துடன், குறித்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு அறிவித்தது.
விசாரணைகள்
இந்த நிலையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பரீட்சை வினாத்தள்கள் கசிந்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
அரசு அச்சகத்தில் இருந்து குறித்த வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதமளவில் விவசாய விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் இணையத்தில் கசிந்திருந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |