இலங்கை - ஆப்கானிஸ்தான் ரி20 தொடர்: இரசிகர்களுக்கான முக்கிய தகவல்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் 3ஆவது ரி20 போட்டிகளுக்கான அனைத்து அனுமதிச் சீட்டுக்களும் விற்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், கொழும்பு மற்றும் தம்புள்ளையில் உள்ள அனுமதிச் சீட்டு விற்பனை கூடங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.
போட்டிகளுக்கான அனுமதிச் சீட்டுக்களை பெறுவதற்காக அனுமதிச் சீட்டு விற்பனை கூடங்களுக்கு வருகைதர வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விற்று தீர்ந்த அனுமதிச் சீட்டுக்கள்
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை இரவு 07:00 மணிக்கு தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளதோடு நேற்றையதினம்(17) இடம்பெற்ற ரி20 போட்டியிலும் இலங்கை அணி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
? T20I Tickets Sold Out: The public is advised not to arrive at ticket counters.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 18, 2024
Match tickets for the 2nd and 3rd T20i games have been 'sold out.'
Accordingly, counters, both in Colombo and Dambulla, are now closed.
Hence, Sri Lanka Cricket wishes to inform the public not to… pic.twitter.com/W2pifO5Qpe
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |