இலங்கை -ஆப்கானிஸ்தான் ரி 20 போட்டி: இரசிகர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தம்புள்ளையில் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு ரி 20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இலங்கை - ஆப்கானிஸ்தான்
இதில் டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த ரி 20 போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரசிகர்களுக்கு அறிவிப்பு
தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்று (15) அதிகளவான மக்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரி 20 போட்டிகளில் அணித்தலைவராகவும் வனிந்து ஹசரங்காவும் உப அணித்தலைவராக சரித் அசலங்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரி20 தொடருக்கான இலங்கை அணி: வனிந்து ஹசரங்கா (அணித்தலைவர்), சரித் அசலங்கா , பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, குசல் பெரேரா, அஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, சதீரா சமரவிக்ரமா, காமிந்து மெண்டிஸ், மகேஷ் தீக்சனா, அகிலா தனஞ்செயா, மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷன்கா, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரு பெர்னாண்டோ.
Tickets for the first game, 'Sold Out'?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 15, 2024
Tickets for the first T20I match to be played in RDICS, Dambulla, on February 17 have been sold out.
The public is hereby kindly advised not to arrive at ticket counters seeking match tickets for the first T20I. #SLvAFG
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |