மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக வந்தவரால் பரபரப்பு
நடைபெற்று வரும் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய டெஸ்ட் போட்டியின் போது, மைதானத்திற்குள் உடும்பு ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்கள் முடிவிலேயே 198 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு
இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் 2ம் நாள் ஆட்டமான இன்று, 47.3வது ஓவரின் போது 216 ஓட்டங்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணியை விட 18 ஓட்டங்கள் இலங்கை முன்னிலையில் இருந்தது.
அப்போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது.
இலங்கை-ஆப்கானிஸ்தான் டெஸ்ட்
இதையடுத்து போட்டி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தற்போது வலையில் இலங்கை அணி 101.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 410 ஓட்டங்கள் பெற்றுள்ளது.
எனவே, இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை விட 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோர் இலங்கை அணி சார்பில் சதம் அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
We had an uninvited guest on the field today ??#SonySportsNetwork #SLvAFG pic.twitter.com/1LvDkLmXij
— Sony Sports Network (@SonySportsNetwk) February 3, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |