இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

Cricket Sri Lanka Cricket England Cricket Team
By Shadhu Shanker Sep 01, 2024 08:02 PM GMT
Report

இங்கிலாந்து (UK), இலங்கை (Srilanka) அணிகளுக்கு இடையிலான 3 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 02- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ்

டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ்

இங்கிலாந்து அணி

இதற்கமைய, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 இலங்கை ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

ஜோ ரூட் சதமடித்து 143 ஓட்டங்களில் ஆட்டமிழந்தமை தொடர்ந்து கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ஓட்டங்களிலும் பென் டக்கெட் 40 ஓட்டங்களிலும், ஹாரி புரூக் 33 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பிரான்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகள்

பிரான்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகள்

இலங்கை அணி

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

2வது இன்னிங்ஸ்

இதையடுத்து, 231 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இமாலய இலக்கு

இதையடுத்து, 483 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து | Sl Vs Eng Scorecard

தினேஷ் சண்டிமால் 58 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 50 ஓட்டங்களும் பிரியநாத் ரத்நாயகே 43 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 292 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019