இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாபே அணி அபார வெற்றி
புதிய இணைப்பு
உலகக்கிண்ண T20 தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாபே அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
179 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (19) பிற்பகல் 3.00 மணிக்கு போட்டி நடைபெறுகின்றது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை (Sri lanka) அணி இன்றைய தினம் சிம்பாம்பே அணியை எதிர்கொள்ளவுள்ளது.
டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள இந்தபோட்டி நடைபெற உள்ளது.
கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (19.02.2026) பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
விறுவிறுப்பான போட்டி
இம்முறை டி20 உலக கிண்ணத் தொடரில் இரு அணிகளும் வெற்றி வேகத்தைப் பெற்றுள்ளதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையுனெ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2008 மற்றும் 2025 வரையான காலப்பகுதியில் இலங்கை மற்றும் சிம்பாம்பே அணிகளுக்கிடையில் 11 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் இலங்கை 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய ரி 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று முன்தினம் (16) நிறைவடைந்த போட்டியில் அவர் விளாசிய அபார சதத்தின் காரணமாக, 6-வது இடத்திலிருந்து இவ்வாறு முன்னிலை பெற்றுள்ளார்.
இப்பட்டியலில் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பில் சால்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
எனினும், பெத்தும் நிஸ்ஸங்கவைத் தவிர வேறு எந்த இலங்கைத் துடுப்பாட்ட வீரரும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |