சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரரின் ஓய்வு முடிவு ஏற்பு..!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான சிறிலங்கா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவின் கோரிக்கையை சிறிலங்கா கிரிக்கெட் சபை (எஸ்எல்சி) ஏற்றுக்கொண்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாக ஓய்வு முடிவிற்கான காரணத்தை ஹசரங்க தெரிவித்ததாக சிறிலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அவரது முடிவை ஏற்றுக்கொள்வோம்

"நாங்கள் அவரது முடிவை ஏற்றுக்கொள்வோம், மேலும் எங்கள் வெள்ளை பந்து திட்டத்தில் ஹசரங்க ஒரு முக்கிய அங்கமாக இருப்பார் என்று நம்புகிறோம்" என்று சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கூறினார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில்

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஹசரங்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வனிந்து ஹசரங்க இலங்கைக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், 26 வயதான சகலதுறை வீரர் 48 ஒரு நாள் சர்வதேச மற்றும் 58, ரி 20 ஆட்டங்களில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.