அரசின் காலைவார நாம் தயாரில்லை - மைத்திரி தரப்பு திட்டவட்டம்
special
announcement
slfp
Nimal Siripala de Silva
By Vanan
அரசின் காலை வாருவதற்கும், பயணத்தைத் தடுப்பதற்கும் நாம் தயாரில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“இந்த அரசு சிறிலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாமும் அரச பங்காளிகள்தான். வெற்றியில் எமக்கும் பங்குண்டு.
எனவே, அரசின் பயணத்தைத் தடுப்பதற்கும், காலை வாருவதற்கும் நாம் தயாரில்லை.
அரசு தவறான திசையில் பயணிக்குமானால் அதனைத் தைரியமாகச் சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு இருக்கின்றது” என்றார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்