நீதியமைச்சருக்கு ஏற்படப்போகும் நெருக்கடி : அனுமதியளித்தது மொட்டு
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe)வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மத்திய குழு அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வேறு கட்சியில் பதவி ஏற்று தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று குழு கோரிக்கை விடுத்திருந்தது.
எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
இதன் அடிப்படையிலும் வேறு பல காரணங்களின் அடிப்படையிலும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மத்தியகுழு அனுமதி வழங்கியது” என நேற்று(07) நடைபெற்ற பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் திஸாநாயக்க தெரிவித்தார்.
11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்
அண்மையில் சுதந்திரக்கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன நியமித்ததும் அதற்கு நீதிமன்றம் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |