பாம்புகளும் கீரிகளும் ஒன்றிணைவது சகஜம்! மொட்டு தரப்பு புனையும் கதை
தனியாக தேர்தல் செய்வது கடினம் என்பதால், தேர்தல் நெருங்கும் போது பாம்புகளும் கீரிகளும் ஒன்றாக இணையும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன என தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சி
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜதனியாக தேர்தல் செய்ய முடியாது, அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சி. இலங்கையின் வரலாற்றில், அரசியல் கட்சிகளும் வெற்றி பெற்ற அரசியல் இயக்கங்களும் எப்போதும் ஒரு கூட்டுத் திட்டத்திற்குள் செயல்பட்டு வந்துள்ளன.
வரலாறு முழுவதும், இலங்கையில் வெற்றி பெற்ற அனைவரும் எப்போதும் ஒரு கூட்டுத் திட்டத்திற்குள் வெற்றி பெற்றுள்ளனர். பிரச்சனை அதுவல்ல. மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி அரசாங்கம் ஏன் பேச விரும்பவில்லை?
முன்னேறுவற்கு தயார்
இந்த அரசாங்கத்திற்கு அனைவரும் பயப்படுவதாகவும், பாம்புகளும் கீரிகளும் ஒன்றிணைந்து அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் கூறுகிறது.
எனினும், ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியும் அதைதான் செய்தது, 2010 ஆம் ஆண்டில், சரத் பொன்சேகாவின் தேர்தலுக்காக அநுர குமார பாம்பும் கீரியுமாக ஒன்றிணைந்தார்கள், 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் கூட, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்காக பாம்பும் கீரியும் ஒன்றிணைந்தன.
இந்த நிலையில், சிறிலங்க பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில், முழு சமூக சக்தியையும் ஒன்றிணைத்து முன்னேற நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
