நாமலின் கூட்டத்தால் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஏற்பட்ட இடையூறு
தம்புத்தேகம நகரில் நேற்று(17) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட பலத்த சத்தம் தம்புத்தேகம தேசிய பாடசாலையில் உயர்தர பரீட்சை மையத்தில் பரீட்சை எழுதிய உயர்தர மாணவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியதாக பரீட்சை ஒருங்கிணைப்பாளர் தம்புத்தேகம தலைமையகத்தின் தலைமை காவல்துறை ஆய்வாளருக்கு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பிரிவு அமைப்பாளர் நியமனம் தொடர்பாக தம்புத்தேகம நகரில் உள்ள ஒரு விழா மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சிரமத்திற்கு ஆளாகிய மாணவர்கள்
நேற்று மதியம் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் புவியியல் பாடத்தின் இரண்டாவது வினாத்தாளை எழுத வந்த மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த உரத்த சத்தம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கடுமையான தடையாக இருப்பதாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் பரீட்சை ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்தனர், மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |