தேசிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் (SLFP) சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கெஸ்பாவ தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை (Keerthi Udawatte) தெரிவித்துள்ளார்.
முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு ஆதரவளித்த இந்த குழுவினர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”எங்களின் முன்னயை தீர்மானம் தவறானது என்பதை நாங்கள் தற்போது உணர்கின்றோம், நாங்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியின் உதவியை கோருகின்றோம்.
உள்ளூராட்சி அளவில் எங்களிற்கு தலைமைத்துவம் உள்ளது, தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை எங்களால் நடைமுறைப்படுத்த முடியும்“ என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொதுத்தேர்தல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |