ரணிலின் தேசிய அரசு யோசனைக்கு பிரதான கட்சிகள் எதிர்ப்பு!
SLPP
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Laksi
தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்பன நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகள் எதிர்ப்பு
இந்தநிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு ஒத்துழைத்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய அரசமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa), தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்