பல்டி அடித்தார் சாகர காரியவசம் - வெளியானது பெரமுனவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்தது மட்டுமன்றி, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்த பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம், இன்று தனது தீர்மானத்தை மாற்றியுள்ளார்.
இந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பினர் தோற்கடிப்பார்கள் என சபை முதல்வரான தினேஷ் குணவர்த்தன கூறியிருந்த நிலையில், கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலக வேண்டும் என நாங்கள் கூறிய போதிலும் எதிர்கட்சியினர் எதிர்பார்க்கின்ற வகையிலான பதவி நீக்கலுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம். இது எமது கட்சியின் முடிவாகும்.
அவர் பதவி விலகினால் அது அவரது தீர்மானம். எனினும் பதவியிலிருந்து நீக்குவதற்கான எந்த தீர்மானத்திற்கும் ஒத்துழைக்கமாட்டோம்
அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்கிற முடிவினை எடுத்திருக்கின்றோம்.
இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் நடத்தப்படுகின்ற விவாதத்தில் இதனை உங்களுக்கு அறியமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.