ரிசாட் அணி எம்.பி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு
election
rizad
sm-raheem-port-city
By Vanan
ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம் ரஹீம், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துள்ளார்.
இவர் கடந்த 20ஆவது திருத்தத்திற்கான வாக்கெடுப்பிலும் ஆதரவாகவே வாக்களித்திருந்தார்.
இதேவேளை போர்ட் சிட்டி ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்