சீனாவை விட இரண்டு மடங்கு உயிர்ப்பலி - ஒன்பதாயிரம் பேரை பறிகொடுத்த இலங்கை! சஜித் ஆவேசம்

Corona People Sajith Premadasa SJB SriLanka
By Chanakyan Aug 27, 2021 08:28 AM GMT
Report

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட இலங்கையில் மரண எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, கிட்டத்தட்ட 9,000 பேரை எங்கள் சிறிய நாடு இழந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்த அறிக்கையில், 

அவர்களில் முன்னணி தொழில் வல்லுநர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சாதாரண குடிமக்கள் மற்றும் இந்த நாட்டின் எதிர்கால பாதுகாவலர்களாக உள்ள ஏராளமான சிறு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில் 4,000இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளதோடு, அனைத்து மருத்துவ நிபுணர்களின் கணிப்புகளையும் உறுதிப்படுத்தும் விதமாக தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதும் நேற்று பதிவாகியது.

◼️ இதற்கிடையில், அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் கொரோனா இறப்புகளை பொதுமைப்படுத்தியுள்ளது, தற்போது கொரேனா இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், தினமும் 200இற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்வதாக தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

◼️ ஒவ்வொரு நாளும் இத்தகைய எண்ணிக்கையிலான பலர் இறந்துபோகும் போதும், இந்த பேரழிவைப் பற்றி உலகம் முழுவதும் கவலைப்படுகையில், அரசாங்கத்தில் உள்ள சிலர் கொரோனா வைரஸ் ஒரு சிறிய தடிமல் நோய் போன்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே கூறுகிறார்கள்.

இந்தக் கருத்துக்கள் மூலம் மனித உயிர்களை அரசாங்கம் எந்த அளவிற்கு ஏலம் எடுத்துள்ளதன் தரத்தையே குறிக்கிறது.

◼️ இன்று, தடுப்பூசி என்பது தலைகீழ் பரிமாற்றமாக மாறியுள்ளது. மருத்துவமனைகளின் கொள்ளவுத் திறன் அதிகமாகிவிட்டதோடு நாடு கடுமையான மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

◼️ அரசியல்வாதிகள் சுகாதார சேவையாளர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முற்படுவதை காரணமாகக் கொண்டு சுகாதார ஊழியர்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர்.

◼️ நாட்டை மூடிய பிறகு மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் முடிவை வழங்கிய அரசாங்கம், மக்கள் மீதான தனது பொறுப்பைத் கைவிட்டு விட்டு, தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையை மக்களுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

◼️ ஐந்து கிலோ அரிசியை விற்றாலும், இன்றைய அதிக விலைக்கு ஒரு கிலோ சீனியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை ரூ. 210 ஆகும். ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.160 ஆக இருந்த சீனியின் விலை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருந்தது ரூ.140 விலையாகும். கடந்த மாத விலை ரூ.115 ஆகும்

* நுகர்வோர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் அவரால் சீனி விலை உயர்வை நம்ப முடியவில்லை என்று கூட சொல்ல வேண்டியிருந்தது.

◼️ எனினும்,சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு ரூ.20 பில்லியன் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாங்கள் ஜனவரி 20 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியதோடு, மார்ச் மாதம் 16,23,24 ஆகிய தினங்களிலும் இது தொடர்பாக நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம் என்பதும் ஹன்சார்ட் பதிவில் உள்ளது.

இவ்வளவு கடுமையான மோசடி மூலம் சீனியின் விலை அசாதாரணமாக உயர்ந்ததற்க்கு தனது நண்பர்களுக்கு நிவாரணம் வழங்கியமையே என்பதை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

◼️ நாட்டின் மக்கள் இப்போது மிக மோசமான சமீபத்திய பணவீக்கத்தை எதிர்கொள்கின்றனர்.

◼️ அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு முன்பு அதன் தலைவர்கள் சொன்ன அனைத்து மக்கள் சார்ந்த ஜனரஞ்சக சொல்லாடல்களும் முற்றிலும் முட்டாள்தனமாகிவிட்டதோடு அனைத்து வாக்குறுதிகளும் மனிதாபிமானமற்ற முறையில் மீறப்பட்டுள்ளன.

◼️ ஊரடங்கு உத்தரவை விதித்து நாட்டை மூடிவிட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும், அதன் தோல்வி, அத்தியாவசியமற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் கூட வீதிகளில் காணப்படுவதால் தெளிவாகிறது.

தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின்பாலான ஒரு குறிப்பைக் கூட கொடுக்க முடியாது என்பதை அரசாங்கமே உறுதியாக நிரூபித்துள்ளதோடு, குறைந்தபட்சம் இந்த நாட்டுக் குடிமக்களின் வாழ்வுரிமைக்கேனும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025