யாழ் - கொழும்பு தொடருந்தில் மோதிய லொறி: சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடருந்தில் பட்டா ரக லொரியொன்று மோதியதில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள தொடருந்து கடவையில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா-மன்னார் பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக்கதவு செயல்படாததால் கடவையை லொரி கடக்கும் போது தொடருந்து மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், லொரியில் பயணித்த தந்தை, தாய் மற்றும் 4 வயது சிறுமி ஆகியோர் விபத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழமையாக அந்த கடவையூடாக தொடரூந்து செல்லும் போது மூடப்படுகின்ற பாதுகாப்புக்கதவு இன்று மூடப்படாமையினால் இவ் அசம்பாவிதம் ஏற்ப்பட்டுள்ளது.
இவ் விபத்தினால் அரைமணிநேர தாமதத்திற்கு பின்னரே தொடரூந்து தனது பயணத்தை
ஆரம்பித்தது.
விபத்து தொடர்பில் குறித்து வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
