ஊடகங்கள் முன் புன்னகை குற்றவியல் பிரிவுக்குள் கண்ணீர் : உண்மையை உரைக்கும் காவல்துறை அதிகாரி
பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளை நாட்டுக்குள் அழைத்து வரும்போது ஊடகங்கள் குவிந்திருப்பதை அவர்கள் அறிவார்கள். கமராக்களைப் பார்த்ததும் புன்னகையை உதிர்ப்பார்கள் ஆனால், கொழும்பு குற்றவியல் பிரிவுக்குள் (CCD) நுழைந்ததும் கதறி அழுது, பீதியில் உறைந்து போவார்கள் என காவல்துறை அதிகாரி நிஷாந்த சொய்ஸா தெரிவித்தார்.
இஷாரா செவ்வந்தியை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்த நிலையில் அவர் ஊடகங்களுக்கு முன்னர் சிரித்த முகத்துடன் செல்லும் காட்சி வெளியாகியிருந்த நிலையிலேயே காவல்துறை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலுமு் தெரிவிக்கையில்,
முடிவிற்கு வரும் வீர சாகசங்கள்
சட்டம் அல்லது நீதிமன்றங்கள் தலையிடும்போது, அவர்கள் சாதாரணமான ஒருவரைப் போலவே ஆகிவிடுகிறார்கள்.
அவர்களின் ‘வீர சாகசங்கள்’ அனைத்தும் அதோடு முடிந்துவிடுகின்றன.
“சட்ட வளாகத்திற்குள் எந்த வீரர்களும் இல்லை!” என்பதே நிதர்சன உண்மை என DIG நிஷாந்த சொய்ஸா மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
