அயல்வீட்டுக்காரருக்கு அனுப்பிய “எப்படி இருக்கின்றாய்” என்ற குறுஞ்செய்தியால் வந்த வினை!
பொரள்ளையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் “கொஹொமத சுது” (எப்படி இருக்கின்றாய் சுது) என அனுப்பப்பட்ட ஒரு குறுஞ்செய்தியால் ஏற்பட்டுள்ளது.
ஒரு பெண் தனது தொலைபேசியில் இருந்து அயல் வீட்டு நபருக்கு “கொஹொமத சுது” (எப்படி இருக்கின்றாய் சுது) என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதை அறிந்த குறித்த பெண்ணின் 35 வயதுடைய கணவர், அது யாருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி? என்று கேட்டுள்ளார்.
இதற்கு அந்த பெண் குறுஞ்செய்தி தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறினார்.
எனினும், அந்த நபர் 25 வயதான அயல் வீட்டாரிடம் தனது மனைவியுடன் ஏதேனும் உறவு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த இருவருக்கும் இடையிலான விவகாரம் பின்னர் சிக்கிக் கொண்டது மற்றும் இரு குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஒரு மோதலை தூண்டியது.
இதில் குறித்த பெண்ணின் கணவரும் அயல்வீட்டு நபரும் கத்தி குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.