டுபாயில் இருந்து வெளியேறி ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தப்பிச் செல்லும் கடத்தல்காரர்கள்
டுபாயில் மறைந்திருந்து அந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பிரதான கடத்தல்காரர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், டுபாயில் இருந்து வெளியேறி ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, அஸர்பைஜான், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பணக்கார வர்த்தகர்கள் என்ற போர்வையில் தப்பிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசா எளிதாகப் பெறக்கூடிய நாடுகள்
அத்துடன், வெளிநாட்டவர்கள் அதிக சோதனைக்கு உட்படுத்தப்படாத நாடுகளைப் போலவே விசா எளிதாகப் பெறக்கூடிய நாடுகளுக்கும் தப்பிச் செல்ல அவர்கள் தேர்வு செய்துள்ளதாக குறிப்படப்படுகின்றது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து இந்த நாட்டிற்கு கொண்டு வருவதற்காக டுபாய் அரசு, காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறையினருடன் கலந்தாலோசித்து, இராஜதந்திர மட்டத்தில் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |