கடல்மார்க்கமாக கடத்த முயன்ற பீடி இலைகள் மீட்பு
நீர்கொழும்பு தடாகத்தில் நேற்றைய தினம்(18) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, 557 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் ஏற்றப்பட்ட இரண்டு படகுகள் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் முகமாக மேற்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
19 பொதிகள்
18 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள களனி நீர்கொழும்பு தடாகத்தின் துவா பகுதியில் நின்றிருந்த 02 படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது படகில் அடைத்து வைத்திருந்த 19 பொதிகளை சோதனையிட்ட போதே பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட படகு, என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.