பொருளாதார நெருக்கடி - சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் தொகை அதிகரிப்பு
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறுவோரின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடல் சீற்றம் சகஜம் என்பதால், சமீபத்தில் கடற்படை ரோந்து பணியை முடுக்கிவிட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
. இலங்கை விமானப்படையும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலங்களில் வடக்கில் இருந்து சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பிச் செல்ல பல்வேறு பல நாள் மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் இந்த நாட்களில் விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
