கைவிடப்பட்ட வீடொன்றில் பெருமளவு புகையிலை இலைகள் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Navy
By Kathirpriya
சீதுவையில் கடற்படையினர் மற்றும் காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 176 கிலோகிராம் புகையிலை இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (23) நடந்த தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் கடத்தப்பட்ட புகையிலை இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் கைவிடப்பட்ட வீடொன்றில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது, அந்த வேளை குறித்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பொதிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணை

மீட்கப்பட்ட 10 பொதிகளிலும் சுமார் சுமார் 176 கிலோ புகையிலை இலைகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட புகையிலை இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.