சபாநாயகர் அலுவலகத்தில் நுழைந்த பாம்பு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickremerathna) அலுவலக அறையில் பாம்பு ஒன்று காணப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (18) காலை இடம்பெற்றதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் பொதுவாக உணவருந்தும் பகுதியிலுள்ள ஜன்னல் வழியாகக் குறித்த பாம்பு உள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
பல்வேறு வகையான பாம்புகள்
சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் தோட்டப் பராமரிப்பு அதிகாரி உடனடியாகச் செயற்பட்டு, குறித்த பாம்பைப் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியவண்ணா ஓயா பகுதியிலிருந்து பல்வேறு வகையான பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்கள் சில காலமாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வருகின்றன.
சமீப காலங்களில் மாத்திரம் சுமார் 20 பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வன இனங்களை வளாகத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றியுள்ளதாகத் தோட்ட பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 17 மணி நேரம் முன்