ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அசிங்கமான எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்குமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல் தளத்தில் இட்ட பதிவில் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
மிகவும் மிக மோசமான வார்த்தைகள் கலந்த எச்சரிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அறிவற்றவர்களே (Crazy Bastards), செவ்வாய்க்கிழமை ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களுக்கு ஆபத்தான நாளாக இருக்கும்.
இதுவரையில்லாத பேரழிவு
இதுவரையில்லாத அளவுக்கு ஒரு பேரழிவை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். ஹோர்முஸை திறக்காவிட்டால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும், பொறுத்திருந்து பாருங்கள்" என எச்சரித்துள்ளார்.

அத்துடன், தனது ஆக்ரோஷமான எச்சரிக்கைப் பதிவின் இறுதியில் "Praise be to Allah" என கூறியுள்ளார்.
இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் பதற்றம் மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்குமாறு ஈரானுக்கு அவர் விடுத்துள்ள இந்தக் கட்டளை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |