நிகழவிருக்கும் முழு சூரியகிரகணம்: கனடா மக்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரியகிரகணம் தோன்றவிருக்கும் நிலையில் கனடாவின் ஒரு பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் 1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில், முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது.
பிரபல சுற்றுலாதளமான நயாகரா நிர்வீழ்ச்சியைக் காண மக்கள் ஏராளமானோர் கூடும் நிலையில், முழு சூரியகிரகணத் தினத்தன்று அங்கு சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முழு சூரியகிரகணம்
எனவே முன்னெச்சரிக்கையாக நயாகரா பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரியகிரகணத்தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட உள்ளது.
எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாலைகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பவர்கள் ISO 12312-2 தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகளை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |