ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு விரைவில் தீர்வு
ஜோர்தானில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு ஜோர்தான் தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஜோர்தானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள், அந்நாட்டு தொழில் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
விசா காலாவதியாகியும் தமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்களை அபராதம் எதுவுமின்றி திருப்பியனுப்ப ஜோர்தான் தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தொழிலாளர்களில் வேறு தொழில்களுக்குச் செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு திரும்பும் எதிர்பார்ப்பிலுள்ள தொழிலாளர்களை கூடிய விரைவில் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |