விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 1916 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட தென்னைச் செய்கை தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் விவசாயிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கக்கூடிய வகையில் தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera), தென்னை பயிர்ச்செய்கை சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தென்னைப் பயிர்ச்செய்கை
இதற்கமைய குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கப்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் உடனடியாகப் பதிலளிக்க முடியும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், அந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு அதிகாரிகள் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |