ஆதிவாசிகளின் பிரச்சினைகளுக்கு செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு
மட்டக்களப்பு - வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்.
அதன்போது, வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருடங்களாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அவர்கள், தங்களுடைய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றதால் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் கிராமத்திற்கான பாதைகள் கடும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் அங்குள்ள வைத்தியசாலைக்கு உதவியாளர்களை நியமித்து தருமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுக்கப்பட்ட பணிப்புரை
இந்நிலையில், ஆதிவாசிகளின் கோரிக்கையின் பிரகாரம் 24 மணித்தியாலத்தில் மாகாண கல்வி அமைச்சின் ஊடாக 02 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பாதை புனரமைப்பதற்கான நடவடிக்கையும், வைத்தியசாலைக்கு உதவியாளர் நியமிப்பதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநரால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்