தாயையும் மகனையும் வெட்டிய அயல்வீட்டார் - சுழிபுரத்தில் துயர் சம்பவம்
Police
Jaffna
Chulipuram
Attrack
Vaddukkodda
By Chanakyan
குடும்ப பெண் மீதும் அவருடைய மகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நிலையில் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 45 வயதான குடும்ப பெண் மீதும் அவருடைய 16 வயதான மகன் மீதும் கத்தியால் வெட்டியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அயல் வீட்டாரான 51 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.