தலைமறைவான ரோஹிதவின் மருமகன் நீதிமன்றத்தில் முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் (Rohitha Abeygunawardena) மருமகன் தனுஷ்க வீரக்கொடி முன்னிலையாகியுள்ளார்.
தனுஷ்க வீரக்கொடி இன்று (24) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனை கைது செய்ய பாணந்துறை வாலானை ஊழல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.
சொத்துக்கள் முடக்கப்படும்
சந்தேக நபர்கள் அவர்களது குடியிருப்புகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஜகத் விதானவின் மகன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் அடுத்த சில நாட்களுக்குள் காவல்துறையினரிடம் சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
