வடக்கில் இதற்கு விரைவில் முடிவு கட்டுவேன்! வடமாகாண புதிய ஆளுநர் சபதம்
sri lanka
jeevan thiyagaraja
northern provencial
By Shalini
வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,
என்னுடைய பதவிக்காலத்தில் வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை.
வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான நடவடிக்கை அத்தனையும் எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, வட மாகாணத்தை மையப்படுத்தி விவசாயம், கல்வி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட 53 விடயங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையில் பணியாற்றத் தான் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.