இரத்தினபுரியில் விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு
Ratnapura
Accident
Death
By Sindu
இரத்தினபுரி, சூரியகந்த - எம்பிலிபிட்டி வீதியில் கெகுனதொல பகுதியில் நேற்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் லொறியொன்றின் இடது பக்கத்தில் அமர்ந்து பயணித்தபோது திடீரென இடது பக்க கதவு திறந்ததில் குறித்த பெண் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த பெண் கொலொன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லொறி சாரதி கைது
உயிரிழந்தவர் மஹேன பகுதியின் விஜேரியவைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் கொலொன்ன காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்