தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை
தென்னாபிரிக்காவுடனான (south africa)முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 233 ஓட்டங்களால் நான்காம் நாளான இன்று (30) இலங்கை(sri lanka) அணி 233 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
முதல் இனிங்ஸில் சொதப்பிய இலங்கை அணி
இதன்படி தென்னாபிரிக்கா அணி தனது முதல் இனிங்சில் 191 ஓட்டங்களை பெற்றது. ஆனால் இலங்கை அணி தனது முதல் இனிங்சில் 42 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
149 ஓட்டங்கள் முன்னிலை பெற்று தனது 2வது இனிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதற்கமைய இலங்கை அணிக்கு இரண்டாவது இனிங்சில் 516 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
ஆறுதல் அளித்த தினேஷ் சந்திமால்
தினேஷ் சந்திமால் 83 ஓட்டங்களைப் பெற்றார். இரு அணிகளுக்குமிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி டிசம்பர் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு இனிங்ஸிலும் 11 விக்கெட்டுக்களை வீழ்த்திய தென்னாபிரிக்க வீரர் மக்ரோ ஜேன்சன் ஆட்டநாயகனாக தெரிவிானார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |