வெளிநாடொன்றின் ஜனாதிபதி அதிரடியாக பதவி நீக்கம் : 60 நாட்களுக்குள் புதிய தேர்தல்
தென் கொரிய (South Korea) ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி இன்று (04) அந்த தீர்மானம் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு ஜனாதிபதியின் பதவி நீக்க தீர்மானத்தை ஒருமனதாக உறுதிசெய்துள்ளனர்.
அரசியலமைப்பு நீதிமன்றம்
அதற்கமைய, தென்கொரிய ஜனாதிபதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக 60 நாட்களுக்குள் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையின் போது, இரு தரப்பினரின் வாதங்களையும் வாசித்தார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில் யூன் இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இதேவேளை தேர்தல் நடைபெறும் காலம் வரையில் தற்போதைய பிரதமர், பதில் ஜனாதிபதியாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2017 ஆம் ஆண்டும் தென் கொரியாவில் இதே முறையில் ஒரு ஜனாதிபதி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்