கொரிய குடியரசு இலங்கைக்கு வழங்கிய உறுதிமொழி

sri lanka friendship south korea
By Vanan Jul 22, 2021 03:47 PM GMT
Report

இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடு தொடர்பாக கொரிய குடியரசிற்கும் இலங்கைக்குமிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா தொற்றுநோய் நிலைமைகளின் போது இலங்கை மக்களைப் பாதுகாப்பதில் கொரிய குடியரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் உறுதியளித்துள்ளார்.

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு முதற்தடவையாக வருகை தந்த கொரிய குடியரசின் தூதுவரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.

மரியாதை பூர்வமான வரவேற்பை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் தென் கொரிய தூதுவருடன் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இரு நாடுகளிலும் உள்ள கொவிட் -19 நிலவரங்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தென் கொரிய தூதுவர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாட்டில் காணப்படும் தொற்றுநோய் நிலைமைகளின் போது இலங்கை மக்களைப் பாதுகாப்பதில் கொரிய குடியரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என கொரிய தூதுவர் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் உறவுகளை மேலும் பலப்படுத்துவதே பாதுகாப்புச் செயலாளருடனான இந்த சந்திப்பின் மூலம் எதிர்ப்பார்ப்பதாக தென் கொரிய தூதவர் தெரிவித்த அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.        

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026