உச்ச நீதிமன்றத்தில் அநுர! சிறை மருத்துவமனையில் டக்ளஸ்! சேதிகள் என்ன?
டிசம்பர் 31 ஆம் திகதியாகிய நாளை நள்ளிரவுக்கு பின்னர் 2026 பிறக்கவுள்ள நேரத்தில் உலக செய்திகளாக இருக்கட்டும் உள்ளுர் செய்திகளாகட்டும் அவற்றின் புதினங்கள் புதிய ஆண்டுக்கு நற்சகுனங்களை வழங்குவதாக தெரியவில்லை.
ரஷ்ய அரச தலைவரின் வால்டாய் இல்லத்தை உக்ரைன் தனது 91 ட்ரோன்கனால் குறிவைத்த நகர்வு முதல் வெனிசுலாவுக்கு உள்ளே அமெரிக்காவின் சீஐஏ நடத்திய தாக்குதல் வரையான செய்திகள் 2026 ஆரம்பத்தை பதற்றப்படுத்துகிறது.
வெனிசுலா துறைமுகத்தின் மீது அமெரிக்காவில் மத்திய புலனாய்வு, இலங்கையை பொறுத்தவரை இந்த முறை தித்வா சூறாவளியின் தாக்கத்தால் புத்தாண்டு நிகழ்வுகள் ஒப்பீட்டு ரீதியில் சற்று களையிழக்கும் காலி முகத்திடல் பகுதியில் நாளை ஏராளமான மக்கள் கூடுவார்கள்ன என்பதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு சிறப்பு பாதுகாப்புத் திட்டத்துடன் சிறிலங்கா காவற்துறை களமிறங்கியுள்ளது.
அநுர அரசாங்கத்தை பொறுத்தவரை இந்த ஆண்டின் முடிவு அவர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் தித்வா சூறாவளி பேரழிவு ஓன்றை ஏற்படுத்தும் என வானிலை முன்னெச்சரிக்ககைகள் விடுக்ப்படடடாலும் அநுர அரசாங்கம் அசமந்தமாக இருந்த குற்றத்தை மையப்படுத்தி சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், அரசதலைவர் அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சர்களும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேபோல ஏற்கனவே அநுர தரப்பில்- அமைச்சரகளுக்கு எதிராக சிறிலங்காவின் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளமை ஒரு நெருடலாக வந்துள்ளது.
அநுரவின் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இன்று சிறிலங்காவின் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தெற்கில் இவ்வாறான தலையிடிகள் இருந்தால் தமிழர்களின் பகுதியில திஸ்ஸ விகாரை மற்றும் சிறிலங்காவின் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவை மையப்படுத்திய அதிர்வுகளும் வரும் நிலையில் இவற்றை தழுவிவருகிறது செய்திவீச்சு..