போராட்டத்தில் குதித்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக (South Eastern University) மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று (28) மாலை 06.30 முதல் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (27) சுகாதார அமைச்சுக்கு (Ministry of Health) முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இருவர் கைது
இவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டிருந்தது.
அத்துடன் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
