விண்ணில் பாய்ந்த விண்கலம் : விரைவில் பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்
கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்கான விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்தியுள்ளது.
இன்று (15-03-25) அதிகாலை 4.33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர்.
ஸ்டார்லைனர் விண்கலம்
ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (SpaceX Crew-10) விண்கலத்தின் மூலம் மார்ச் மாதம் 16ஆம் திகதி அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா நிறுவனம் இணைந்து விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டடிருந்தது.
ஆனால், கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5:30 மணிக்கு விண்ணில் செலுத்தவிருந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
19 ஆம் திகதி பூமிக்கு திரும்புவார்கள்
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று (15-03-25) அதிகாலை 4.33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 விண்கலம் மூலம் விண்ணில் பாய்ந்த என்டூரன்ஸ் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.33 மணிக்கு புறப்பட்டு சென்ற இந்த விண்கலம் இன்றிரவு 11.30 அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 19 ஆம் திகதி வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் இருவரும் இந்த விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்