உலகக் கோப்பை இறுதிப் போட்டி! புயல் காரணமாக இரத்து செய்யப்பட்ட ஸ்பெயினின் பயிற்சி
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளின் இறுதி பயிற்சி அமர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு (RFEF) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் புயல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்க, நியூ ஜெர்சியில் உள்ள மெலனி லேன் பயிற்சி மைதானத்தில் நடைபெற இருந்த அணியின் வெளிப்புற பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரர்கள் தற்போது உட்புற அரங்கில் உடற்தகுதி மற்றும் வார்ம்-அப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி
இதேபோல், அர்ஜென்டினா அணியின் பயிற்சியும் திட்டமிட்ட நேரத்தை விட 45 நிமிடங்கள் தாமதமாக, நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி (அமெரிக்க நேரம்)(7.00 மணி - GMT) (இலங்கை நேரம் 20ஆம் திகதி அதிகாலை) நடைபெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 14 மணி நேரம் முன்