சற்று முன்னர் நாட்டை வந்தடைந்த மாலைதீவு சபாநாயகர்!
Maldives
SriLanka
Mohamed Nasheed
By Chanakyan
மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டை வந்தடைந்த காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
நாடு பொருளாதார ரீதியாக பெருதும் பாதிக்கபட்டுள்ள நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.