குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய்: விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாடளாவிய ரீதியில் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்(Lady Ridgeway Hospital) விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், "குறிப்பாக மேல் சுவாசக் குழாயை அடிப்படையாக கொண்ட வைரஸ் காய்ச்சல் நாட்டில் பரவி வருகின்றது, இந்த நிலை மேலும் தீவிரமடையலாம்.
எனவே அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும்.
வைத்தியர்கள் விசேட அறிவிப்பு
இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், இது குழந்தை பருவ ஆஸ்துமா காரணமாக இருக்கலாம்.
இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது.இப்போதும் கூட, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதுபோன்ற வைரஸ் காய்ச்சலின் பல திரிபுகள் உள்ளன.
எனவே, அந்த குழந்தைகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |