விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு
புதிய இணைப்பு
நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேர்த்தியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, விமான நிலையத்திற்கு பயணிக்கும் போது பயணிகள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் இந்த காலகட்டத்தில் விமான நிலைய வளாகத்திற்குள் நெரிசலைக் குறைக்க, பயணிகள், பார்வையாளர்களை முனையத்திற்கு அழைத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ளுமாறு சிறீலங்கன் விமான சேவை அறிவுறுத்தியுள்ளது.
இல்லையெனில், 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அல்லது +94 117 77 1979 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுமாறும் விமான சேவை அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை
நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலையை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் மத்தள, இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்