கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு
Colombo
Water Cut
Water Board
Water
By Thulsi
கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (20) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான 8 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
நீர் வெட்டு
அந்தவகையில் பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ.

மற்றும் ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
5 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி