களுத்துறையில் சோதனைக்குட்படுத்தப்பட்ட உணவகங்கள்!
களுத்துறையிலிருந்து அளுத்கம வரையான பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அருகில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் வாகனங்கள் பொது சுகாதார ஆய்வாளர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை, பேருவளை மற்றும் அளுத்கம உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள உணவகங்களில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
பாடசாலைகளில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் பேருவளை பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனனர்.
உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை
இதனையடுத்து பொது சுகாதார ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 6 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், உணவு விற்பனை செய்யும் முச்சக்கரவண்டிகளிலும் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளின் உடல் நிலை குறித்தும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன
இந்த சோதனை நடவடிக்கைகளில், களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் பேருவளை பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் 50 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்