போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த விசேட குழு
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு, போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களிடம் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற தீர்மானித்துள்ளது.
குறித்த குழுவானது நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி சபாநாயகரால் இந்த நியமிக்கப்பட்டுள்ளது பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையிலான இந்த சிறப்புக் குழுவில் 11 பேர் பங்குபற்றிவுள்ளனர்.
அத்தோடு, நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன இந்தக் குழுவின் செயலாளராகச் செயற்படுகின்றாக கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம்
அதேவேளை இந்த சிறப்பு குழுவானது போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியும் என அறிவித்துள்ளது.

இது தவிர, legis com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம்.