எதிர்க்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்..!
நாடாளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (05) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
பலமான நாடாளுமன்ற நடவடிக்கை
இதன் மூலம் பலமான நாடாளுமன்ற நடவடிக்கைகளை கொண்டமைந்த நாடாளுமன்றத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் பக்கம் நாம் முன்நிற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற குழுக்களில் கவனம் செலுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இங்கு சகல கட்சித் தலைவர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்து சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/19cff41c-2590-45ce-84c9-fc98f480a879/25-67a33c238e43d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ceed62b9-a226-476f-aed2-4aa6107b292a/25-67a33c240fcaa.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/888b5fbe-5048-4871-a20e-12fdd2d43d47/25-67a33c248556f.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)