மனித உயிர்களை பாதுகாக்க நமக்கு இருக்கும் ஒரே ஒரு தெரிவு இதுதான்!
corona
sri lanka
pathma gunarathna
By Shalini
கொரோனா வைரஸ் பரவலில் இருந்தும், மரணத்தில் இருந்தும் எம்மை பாதுகாத்துக்கொள்ள எமக்கு இருக்கும் ஒரே தெரிவு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதாகும் என இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள எமக்கு இருக்கும் ஒரே தெரிவு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது மட்டுமே.
அதனையே சகலரும் வலியுறுத்தி வருகின்றோம். அதேபோல் எந்த தடுப்பூசி வேண்டும் என்ற தெரிவுகள் அவசியமற்றதாகும்.
மூன்றாம் தடுப்பூசி குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
அது குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். ஆனால் சகலருக்கும் மூன்றாம் தடுப்பூசி அவசியமாகுமா என்றால் அதற்கான தேவை இல்லை என்றே நான் கூறுவேன் என்றார்.