ஆடி மாதத்தின் சிறப்பு: முக்கியம் பெறும் அம்மன் விரதங்கள்!

Astrology Aadi Masam
By Pavi Jul 23, 2026 12:20 PM GMT
Report

ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாக இது இந்துக்களால் பார்க்கப்படுகின்றது.

இம்மாதம் இறைவனுக்கு விரதங்கள் இருப்பததல் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. 

பாரிய விளைவுகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்...!

பாரிய விளைவுகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்...!

ஆடி மாதத்தின் விஷேச விரதங்கள்

இம் மாதத்தில் பெண்கள் ஓளவையார் விரதம் கடைபிடிப்பார்கள்.

ஆடி மாதத்தின் சிறப்பு: முக்கியம் பெறும் அம்மன் விரதங்கள்! | Special Fasts Of The Month Of Aadi Benefits

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதம் உதவும் என கூறப்படுகின்றது.

ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை கூறப்படுகிறது.

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளித்தால் அது பல நன்மைகளை கொண்டு வரும் என்ப்படுகின்றது.

துளசி வழிபாடு ஆடி மாதத்தின் அரிதான மிக முக்கிய வழிபாடாகும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப்பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இத்தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் பெருகுவதுடன் நாக தோஷமும் நீங்கும் எனப்படுகின்றது.

சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!

சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!

ஆடி பெருக்கு

இது ஆடி 18 என்று இந்துக்களால் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது.

ஆடி மாதத்தின் சிறப்பு: முக்கியம் பெறும் அம்மன் விரதங்கள்! | Special Fasts Of The Month Of Aadi Benefits

அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். மேலும், ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் ஆரம்பிப்பார்கள் இதன்படியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் உருவாகியுள்ளது.

ஆடி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய விரதங்கள் மற்றும் வழிபாடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

1. ஆடி அமாவாசை விரதம் மற்றும் வழிபாடு: ஆடி அமாவாசை திதி, மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜை செய்யப்படுகிறது. இந்த நாளில் காலையில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அன்னதானம் வழங்குவது சிறப்பு.

மேலும், பித்ரு தோஷம் நீங்கவும், முன்னோர்களின் ஆசி பெறவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

2. ஆடி வெள்ளிவிரதம் மற்றும் வழிபாடு: ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பூ, பழம், மாலை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யப்படுகிறது. பலர் வெள்ளி அன்று விரதம் இருந்து, அம்மனுக்கு நெய்வேத்தியமாக பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை படைப்பர்.

மேலும், செல்வம், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலனுக்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடிப்பூரம் 

3. ஆடிப்பூரம் மற்றும் வழிபாடு: ஆடி பூரம் ஆண்டாள் திருநக்ஷத்திரமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. விஷ்ணு கோயில்களில் இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்வர்.

ஆடி மாதத்தின் சிறப்பு: முக்கியம் பெறும் அம்மன் விரதங்கள்! | Special Fasts Of The Month Of Aadi Benefits

இதில் ஆண்டாளின் அருளைப் பெறுவதற்கும், ஆன்மீக உயர்வுக்காகவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

4. ஆடி கிருத்திகைவிரதம் மற்றும் வழிபாடு: ஆடி மாத கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நாளாகும். முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் வேல் வழிபாடு நடைபெறும்.

பக்தர்கள் விரதம் இருந்து, முருகனுக்கு பால், தேன், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வர். இன்றைய தினத்தில் முருகனின் அருளால் தடைகள் நீங்கவும், வெற்றி பெறவும் இந்த விரதம் உதவுகிறது.

5. ஆடி பெருக்குவிரதம் மற்றும் வழிபாடு: ஆடி மாதம் 18-ஆம் நாள் ஆடி பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று, நீர் வழிபாடு செய்யப்படுகிறது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் செய்யப்படுகிறது. இயற்கையை போற்றுவதற்கும், வளமான வாழ்க்கைக்காகவும் இந்த நாள் முக்கியமானது.

வரலட்சுமி விரதம்

6. வரலட்சுமி விரதம் மற்றும் வழிபாடு: ஆடி மாதத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜைகள், மஞ்சள் கயிறு அணிவித்தல், மற்றும் நெய்வேத்தியங்கள் செய்யப்படுகின்றன.

ஆடி மாதத்தின் சிறப்பு: முக்கியம் பெறும் அம்மன் விரதங்கள்! | Special Fasts Of The Month Of Aadi Benefits

பெண்கள் இந்த விரதத்தை கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்ப செல்வத்திற்காகவும் அனுஷ்டிப்பர்.

செல்வம், செழிப்பு மற்றும் குடும்ப நலனை வேண்டி இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரத நாட்களில் அதிகாலையில் எழுந்து, குளித்து, சுத்தமான உடைகள் அணிந்து, பூஜை செய்ய வேண்டும்.

பூஜையில் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள், பழங்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. விரத நாட்களில் பலர் உப்பு இல்லாத உணவு அல்லது பழங்கள் மட்டும் உண்பர்.

சிலர் முழு உபவாசமாக இருப்பர். குறித்த நாட்களில் அம்மனுக்கு உகந்த மந்திரங்களான லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சப்தசதி, அல்லது முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை ஜபிக்கலாம்.

பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்...! வார ராசிபலன்

பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்...! வார ராசிபலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி