ரணிலுக்காக வெளிவருகின்றது விசேட வர்த்தமானி
UNP
Parliament
Ranil Wickremesinghe
Gazette
SriLanka
By Chanakyan
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து தேசிய தேர்தல் ஆணையகம் இன்று வர்த்தமானி வெளியிட திட்டமிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நிலுவையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் இடத்திற்கு நியமிக்க முடிவுசெய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார புதன்கிழமை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 249,435 வாக்குகளை பெற்ற நிலையில் கட்சிக்கான தேசியப் பட்டியல் இடம் வெற்றிடமாகவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி